கிரிக்கெட்

IPL – கலக்கல் ராப் சாங் வெளியிட்ட ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்!

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பெங்களூர் வெற்றி கண்டது.

நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையில் இந்த ஐபிஎல்-ன் நான்காவது போட்டி நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் வீரர் தான் கிறிஸ் கெய்ல். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த கெய்ல், டி20 ஸ்பெஷலிஸ்ட். சென்ற ஐபிஎல் தொடரின் போதும் கெய்ல், பட்டையைக் கிளப்பினார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் கெய்ல், ‘இந்தியா சே ஜமைக்கா’ என்கிற ராப் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை கெய்ல், எமிவாய் பன்டாய் என்கிற இந்தியா ராப் பாடகருடன் இணைந்து பாடியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version