சினிமா செய்திகள்

நிர்வாண புகைப்படங்களை கேட்டவருக்கு நியூட் புகைப்படங்களை அனுப்பிய சின்மயி?

Published

on

கவிஞர் வைரமுத்து மீது பகிரங்கமாக மீடூ சர்ச்சையை கிளப்பிய பாடகி சின்மயி, தினமும் ட்விட்டரில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், சின்மயியிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்ட சின்மயி அவருக்கு நியூட்ஸ் எனும் நெயில் பாலிஷ் புகைப்படங்களை அனுப்பி அவரது மூக்கை உடைத்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் நாளுக்கு நாள் நம் நாட்டில் பெருகி வருகின்றன. இணையத்தில் இப்படி பகிரங்கமாக பிரபலங்களிடமே கேள்வி கேட்கும் அளவுக்கு சில இளைஞர்கள் மனநிலையும் மோசமாகி போயுள்ளது வருந்தப்பட வேண்டிய ஒரு விஷயம் தான்.

தனது நியூட் புகைப்படங்களை கேட்ட இளைஞரிடம் கோபம் கொள்ளாமல், நியூட் நிறுவனத்தின் அழகுசாதன பொருட்களான நெயில் பாலிஷ் புகைப்படங்களை அனுப்பிய சின்மயிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.

அந்த நெட்டிசன் தனது மூக்கறுப்பட்ட நிலையில், அவரது பதிவை நீக்கி விட்டு ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Trending

Exit mobile version