சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை; மனம் திறந்தார் சின்மயி!

Published

on

பாடகி சின்மயி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார்.

பெண்களை தவறான மன நிலையில் தொடுவது, தொட்டு பேசுதல், அணைத்தல் போன்றவை சாதாரணமாக தெரியலாம். ஆனால், அவை மனதளவில் பெரிய பாதிப்பையும், ஆண்களின் மீது பயத்தையும் உண்டு பண்ணுகின்றன. எனக்கு 8 அல்லது 9 வயது இருக்கும், அம்மாவுடன் ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். நான் அங்கு தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ என்னை தொடுவதாக உணர்ந்து துடித்தெழுந்தேன். இது குறித்து என் அம்மாவிடமும் சொன்னேன். மேலும், 10 அல்லது 11வயதில், கச்சேரிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு முதியவர், என் தொடையை கிள்ளிக் கொண்டே இருந்தார்.

சமீபத்தில், ட்விட்டரில், எனக்கு ஆதரவளித்து பேச தொடங்கினார். நானும் பேச தொடங்கினேன். பின்னர், டார்லிங்.. ஸ்வீட் ஹார்ட்.. என்ற வார்த்தைகளை கொண்டு அத்துமீற ஆரம்பித்தார். நான் அதனை கண்டித்தவுடன், ஆபாசமான கருத்துக்களையும், பதிவுகளையும் போட ஆரம்பித்துள்ளார்.

பெண்கள், வெளியவும், இணையதளங்களிலும் கூட பாதுகாப்பாக இல்லதது போன்று உணர்கிறேன் என மனம் திறந்துள்ளார் சின்மயி.

Trending

Exit mobile version