உலகம்

2 மாதங்களாக சீனப் பணக்காரர் ஜாக் மா மாயம்..!- சீன அரசின் கோபம் காரணமா?

Published

on

அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த 2 மாதங்களாகக் காணவில்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது.

உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜாக் மா சீனாவின் மாபெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் சீன அரசின் வர்த்தக கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார் ஜாக் மா.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜாக் மா மற்றும் அவரது அலி பாபா நிறுவனத்தின் மீது தனது தாக்குதல்களை சீன அரசு நடத்தத் தொடங்கியது. நிறுவனத்துக்கான சான்றிதழ்களை நிறுத்தி வைத்த சீன அரசு ஒரு புது வித குற்றச்சாட்டுடன் அலிபாபா மீது விசாரணையைத் தொடங்கியது. ஏமாற்று வேலை, போலி என பல அடைமொழிகளுடன் அந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த 2 மாதங்களாக ஜாக் மா குறித்த எந்தத் தகவல்களும் வெளியாக வில்லை. அவர் காணாமல் போயிவிட்டாரா அல்லது மறைந்து வாழ்கிறாரா எனத் தெரியவில்லை என செய்திகள் வெளியாகி வருகின்றன.

Trending

Exit mobile version