உலகம்

ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடத்தில் குடித்த இளைஞர் பரிதாப மரணம்!

Published

on

கடந்த சில நாட்களாக கேஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும் இளைஞர்கள் திடீர் திடீரென மரணம் அடைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சீனாவில் இளைஞர் ஒருவர் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடத்தில் குடித்ததால் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் ஒருவர் பார்ட்டி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை பத்தே நிமிடத்தில் குடித்து காட்டுவதாக சக நண்பர்களிடம் சவால் விட்டார். இதனை அவர் சொன்னது போலவே ஒன்றரை லிட்டர் கோகோ கோலோவை குடித்துவிட்டார்.

ஆனால் அவர் கோகோ கோலாவை குடித்த சில நிமிடங்களில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அவருடைய வயிற்றுக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான கேஸ் உருவாகி இருப்பதை கண்டனர்.

அதன்பின் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவரது குடலில் ஒரு அசாதாரண கேஸ் உருவாகியிருந்ததையும் கண்டுபிடித்தனர். அளவுக்கு அதிகமாக கோக்கோ கோலாவை குடித்ததால் கேஸ் உருவாகி ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக குளிர்பானங்களை அருந்துவதால் ஏற்படும் வித்தியாசமான வாயு காரணமாக அந்த இளைஞரின் மரணம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் கூட பெட்டிக் கடைகளில் விற்கும் பத்து ரூபாய் சலுகை விலை குளிர்பானங்களை குடித்து சிறுவர் சிறுமியர்கள் மரணம் அடைந்து வரும் சம்பவங்கள் நடந்து உள்ளது. எனவே இனிமேல் அளவுக்கு அதிகமாக குளிர்பானங்களை குடிக்க கூடாது என்றும் குறைந்த விலையில் தரம் குறைந்த குளிர்பானங்களை குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version