உலகம்

“எங்க Apps-யா தடை பண்றீங்க..!”- இந்தியாவுக்கு எதிராக சீறிய சீனா

Published

on

சீன நாட்டில் உருவாக்கப்பட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு, சென்ற ஆண்டு திடீரென்று இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவு நிரந்தரமாக மாற்றப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு சீன அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக லடாகிற்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இரு நாட்டு ராணுவத் தரப்புகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இது சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த மோதல். இன்று வரை வெவ்வேறு வகைகளில் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு நாட்டு அரசுகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டிருந்த போதே, எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி, இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சீன ராணுவம். இதில் பல இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைப் போலவே சீனத் தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து தான் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த இடைக்காலத் தடை, நிரந்தர தடையாக மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

இதற்கு சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ராங், ‘பாரபாட்சம் காட்டும் வகையில் இந்தியத் தரப்பு எடுத்த நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது இரு நாட்டு உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறும் செயலாகும்’ என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

 

Trending

Exit mobile version