இந்தியா

சோனு சூட் போட்ட டிவிட்டுக்கு பதில் அளித்த சீனா!

Published

on

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் தினம் அயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சீனா தடுக்கிறது என்று பாலிவுட் நடிகர் சோனு சுட் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

சோனு சூட் டிவிட்டர் பதிவில், “இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெற முயன்று வருகிறோம். ஆனால் இதில் சோகம் என்னவெனில் சீனா அதை தடுக்கிறது. இங்கு இந்தியாவில் பலர் உயிரை இழந்து வருகின்றனர். சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும், சீன வெளியுறவுத் துறை அமைச்சகமும் அவற்றை அனுப்பி எங்களுக்கு உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சோனு சூட் டிவிட்ட போட்ட சில நிமிடங்களில் அது ஆயிரம் கணக்கான நபர்களால் பகிரப்பட்டது. அதற்கு சில மணி நேரங்களில் பதில் அளித்த சீன தூதவர் சன் வீடியாங், “உங்களது டிவிட்டர் பதிவைப் பார்த்தேன் சோனு சூட். மதிப்பிற்குரிய சூட், கோவிட்-19 எதிராக போராட இந்தியாவுக்கு எங்களது முழு ஒத்துழைப்பையும் சீனா அளிக்கும். எனக்கு தெரிந்தவரையில், இந்தியா, சீனா இடையிலான சரக்கு விமான போக்குவரத்தில் எந்த சிக்கலும் இல்லை. இயல்பாகவே உள்ளன. கடந்த 2 வாரத்தில் மட்டும் சீனாவில் இருந்து 61 சரக்கு விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.” என்று தெரிவித்து இருந்தார்.

அண்மையில் கொரோனா எதிராக இந்தியா போராட, சீன அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் சோனு சூட் போட்ட டிவிட்டுக்கு இந்தியாவின் சீன வெளியுறவுத் துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.

கொரோனா முதல் அலையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்கள் திரும்பப் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதற்காக சோனு சூட் பலரது பாராட்டையும் பெற்றார். இவருக்காக வட மாநிலங்களில் சில இடங்களில் கோவிலும் கட்டி வருகின்றனர்.

இப்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வது, மருத்துவமனை படுக்கைகளை ஏற்பாடு செய்து தருவது போன்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version