உலகம்

கொரோனாவை வென்று மின்சாரத்திடம் தோற்ற சீனா: சரியும் பொருளாதாரம்!

Published

on

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரனோ வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானவர்கள் பாதித்தது என்பதும் இந்தியா உள்பட பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய கொரனோ வைரஸ் தான் காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரனோ வைரஸை பரப்பிய சீனா பல்வேறு அதிரடி நடவடிக்கை காரணமாக அதிரடியாக கொரனோவை கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரனோவை கட்டுப்படுத்திய சீனாவால் மின் தடையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகிறது. இதனால் சீன பொருளாதாரம் ஆட்டம் கண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சீனாவில் தற்போது பெரும் பிரச்சனையாக இருக்கும் மின்தடை அடுத்த ஆண்டுவரை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மின்தடை காரணமாக சீனாவில் உள்ள பல தொழில்கள் முடங்கி உள்ளதாகும் குறிப்பாக ஒரு சில நிறுவனங்கள் திவால் ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் மின்வெட்டு பிரச்னையால் காரணமாக பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சுமார் 5% மட்டுமே சீன பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதுவே முதலாம் காலாண்டில் 18 சதவீதமாகவும் இரண்டாவது காலாண்டில் 8 சதவீதமாகவும் இருந்ததாகவும் அடுத்த காலாண்டில் சீன பொருளாதாரம் மேலும் நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொரனோவை மிக எளிதாக வென்ற சீனாவால் மின்சாரத்தை வெல்ல முடியவில்லை என்றும் இதனால் பல தொழில்கள் ஆட்டம் கண்டு இருப்பதாகவும் ஜிடிபியும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version