உலகம்

ஊருக்குள் வழித்தடம்: யானைகளுக்காக 1.50 லட்சம் மக்களை இடம் மாற்றிய சீன!

Published

on

சீனாவில் யானைகள் வழித்தடத்தில் மக்கள் இடையூறாக இருப்பதால் மக்களுக்கும் யானைகளுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக சுமார் 1.50 லட்சம் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளது சீன அரசு.

சீனாவில் தென் மேற்கு யூனான் மாகாணத்தில் 17 மாதங்களுக்கு முன்னர் வனப் பகுதியில் இருந்து 14 யானைகள் வெளியேறி உள்ளன. இந்த யானைகள் இதுவரையில் 500 கி.மீ பயணம் செய்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன. யானைகளின் வழித்தடத்தில் பொது மக்கள் வசிக்கும் பல ஊர்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு யானைகளாலும், யானைகளுக்கு மக்களாலும் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என அரசு செயல்படத் தொடங்கியது.

இதற்காகத் தொடர்ந்து யானைகளின் வழித்தடத்தில் வாழும் 1.50 லட்சம் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 25,000-க்கும் அதிகமான போலீஸார் ட்ரோன் கேமிராக்கள் கொண்டு யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து மக்களை அந்த வழிகளில் இருந்து தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். யானைகள் காட்டுக்குள் சென்ற உடன் மக்களை மீண்டும் தங்களது ஊருக்குள் காவல் துறையினர் அனுமதிக்கின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version