உலகம்

வாவ்.. கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை!

Published

on

பெய்ஜிங்: உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.

சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த பாலம் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 22.9 கிலோ மீட்டர் பாலம் கடலில் கட்டப்பட்டுள்ளது. 6.7 மீட்டர் தரையிலும், மீதமுள்ள தூரம் பேர்ல் நதி மீதும் செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது.

மொத்தம் 4 லட்சம் டன் இரும்பு இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட எல்லா விதமான இயற்கை பேரிடர்களிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் பயணிக்க மொத்தம் 45 நிமிடம் மட்டுமே ஆகும். இந்த பாலத்தை கட்ட 8 வருடம் ஆகியுள்ளது. இந்த பாலம் வரும் 24ம் தேதி திறக்கப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version