உலகம்

உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி.. சீனாவில் சீல்.. புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து!

புத்தாண்டு கொண்டாட்டங்களும் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published

on

கொரோனா வைரஸ் உருமாறியுள்ள நிலையில், சீனாவில் பெய்ஜிங் நகரில் பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, புத்தாண்டு கொண்டாட்டங்களும் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி புதிதாக 16 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பெய்ஜிங்கில் உள்ள ஷூனி மாவட்ட பகுதியில் கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் வீட்டிற்குள்ளையே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது ஷூனி மாவட்டத்தில் 10 இடங்கள் முடக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லைவ் மியூசிக், இசை திருவிழா, ஒளி வேடிக்கை நிகழ்ச்சிகள் என பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் வெளியாட்கள் உள்ளே நுழையவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Trending

Exit mobile version