உலகம்

சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாடத் தடை!

Published

on

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வார நாட்களில் ஆனலைன் கேம்கள் விளையாடத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாடத் தடை விதித்தது மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் 3 மணி வரையில் மட்டுமே கேம் விளையாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் முதல் சிறார்கள் வெள்ளிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மாலை 8 மணி முதல் 9 மணி வரையில் மட்டுமே சீனாவில் கேம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக இந்த விதிகள் வார நாட்களில் 90 நிமிடங்களும், வார இறுதி நாட்களில் 3 மணி நேரமும் கேம் விளையாடச் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது இந்த கட்டுப்பாடு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விதிகளை கேம் நிறுவனங்கள் மூலம், நேரடியாக கட்டுபபடுகள் விதிக்கும் போது சிறுவர்கள் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடுவது குறையும். இது கேம் நிறுவனங்களுக்கு இழப்பு என்றாலும் மாணவர்கள் நலன் முக்கியம்.

இந்தியாவிலும் தொடர்ந்து ஆன்லைம் கேம் விளையாடுவதில் சிறுவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்திய அரசும் இதே போன்று ஆன்லைன் கேம் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைக்கத்தொடங்கியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version