இந்தியா

இந்தியாவுக்குள் புகுந்து சிறுவனை கடத்தியதா சீன ராணுவன்: பாஜக எம்பி புகார்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது என்பதும் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து வருகிறது என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய எல்லையில் சீனா பிரம்மாண்டமான நகரத்தையே உருவாக்கி வருவதாகவும் இது குறித்து இந்தியா கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றன.

இந்த நிலையில் பாஜக எம்பி தபிர் காவ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இந்திய சிறுவனை கடத்தி சென்று விட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய எல்லையான அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள லங்டா ஜோர் என்ற பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்றதாகவும் அந்த சிறுவனுடன் கடத்தப்பட்ட இன்னொரு சிறுவன் சீன ராணுவத்தில் இருந்து தப்பி வந்து தன்னிடம் கூறியதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பிரதமர் மோடி, உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக எம்பி அவர்களின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version