உலகம்

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு: ஒரு கோடி மக்கள் வீட்டில் முடங்க உத்தரவு!

Published

on

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதை அடுத்து உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதை அடுத்து ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து சீனாவில் உள்ள முக்கிய நகரமான சியான் நகரில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் உள்ள ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த புதன்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் மக்கள் அவசியம் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வீட்டில் வீட்டிற்கு ஒருவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இருக்கும் சியான் நகரின் சாலைகள் தற்போது வெறிச்சோடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை அடுத்து மேலும் சில நாடுகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version