இந்தியா

பசிக்கொடுமையால் மண்ணை சாப்பிட்ட 2 வயதுக் குழந்தை பலி!

Published

on

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள் நாகமணி, மகேஷ் தம்பதியினர். இவர்களுக்கு என்ற நிரந்தர வீடு கிடையாது. தற்காலிகமாக தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவர்களது வீட்டில், நாகமாணி மகேஷ் தம்பதியினர் அவர்களது ஐந்து குழந்தைகள் மற்றும் நாகமணியின் தாய், நாகமணி சகோதரியின் குழந்தை வெண்ணிலாவும் வசித்து வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் நாகமணியின் 3 வயது மகன் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 வயதே ஆண நாகமணியின் சகோதரியின் குழந்தை வெண்ணிலா பசியால் மண்ணை தின்றதால் பலியாகி உள்ளார். அம்மா, அப்பா, பாட்டி என்று அந்த குடும்பத்தில் அனைவரும் மதுவுக்கு அடிமையானவர்கள். ஒழுங்காகச் சமைப்பதில்லை. அதனால் குழந்தைகளுக்கு ஊட்டிவிடுவதும் இல்லை அவர்கள்.

சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த குழந்தை வெண்ணிலாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூட அந்த குடும்பத்தில் யாரும் தயாராக இல்லை. தற்போது நாகமணியின் ஒரு வயதுக் குழந்தை தவிர, மீதமுள்ள 3 குழந்தைகளும் அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மூவரும் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்படவுள்ளனர். நாகமணியின் மனைவியும் ஒரு வயதுக் குழந்தையும் ஊட்டச்சத்து புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர். நாகமணியும் அவரது தாயும் போதை தடுப்பு மீட்பு மையத்துக்கு செல்லவுள்ளனர்.

Trending

Exit mobile version