வணிகம்

ரூ.1-க்கு கிருமி நாசினி.. சென்னை நிறுவனம் அதிரடி!

Published

on

ரூபாய்க்கு, ஷாம்பூ பாக்கெட் போல சானடைசர் என்ற கிருமி நாசினி தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதில், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள சானடைசர் எனும், கிருமி நாசினியை பயன்படுத்தி, கையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி கூறுகிறார்கள்.

அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட, கவின் கேர் நிறுவனம், ஒரு ரூபாய்க்கு 2 மில்லி அளவில் சிக் கிருமி நாசினியை பேக்கெட் செய்து விற்று வருகிறது.

பாட்டில்களில் தேங்காய் எண்ணெய் விற்ற போது, அதை முதன் முதலாக பாக்கெட்களில் விற்று, வாடிக்கையாளர்களைப் பெருமளவில் கவர்ந்து வர்த்தகத்தைப் பெருக்கிய நிறுவனம் கவின் கேர்.

பின்னர் அதே போலவே, ஷாம்பு பேக்கெட்களை கவின் கேர் விற்றது. அதுவும் வாடிக்கையாளர்களை பெரும் அளவில் கவர்ந்தது. இன்று வரை பெரும்பாலான நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் ஷாம்பு பாக்கெட்களை விற்று வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version