தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள்: அனைத்து மத தலைவர்களுடன் ஆலோசனை

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே வரக்கூடாது என்றும் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பகல் நேரத்திலும் கூட பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது வழிபாட்டு தலங்களிலும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்து அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version