தமிழ்நாடு

கோபாலபுரம் இல்லத்தில் கண்கலங்கிய முதல்வர்: ஆறுதல்படுத்திய குடும்பத்தினர்!

Published

on

தமிழக முதலமைச்சராக இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டு அதன் பின் தலைமைச் செயலகம் சென்று அதிரடியாக ஐந்து முக்கிய உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்பின் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

அதன்பின்னர் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். அதன் பின்னர் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் தன்னையும் அறியாமல் கண் கலங்கியதை அதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை ஆறுதல் படுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ள இந்த நேரத்தில் தனது தந்தை இல்லையே என்ற ஏக்கத்தினால் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கண்கலங்கியதாகவும், அதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை ஆறுதல்படுத்தியதாகவும் தெரிகிறது

இருப்பினும் கருணாநிதி விட்டுச் சென்ற கனவை முக ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் என்றும் தமிழகம் இந்தியாவின் முதல் மாநிலமாக வர வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்ற முக ஸ்டாலின் தான் பொருத்தமான நபர் என்றும் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version