தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!

Published

on

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஜெயக்குமார் ஊழல் செய்துள்ளார் எனக் கூறியது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான மக்கள் மனநிலை குறித்தும் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவதூறு பரப்பியது என இரண்டு காரணங்களுக்காக வழங்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை எம்.பி, எம்எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கின் விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் இதுவரை மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version