தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர், களத்தில் இறங்கிய முதல்வர், கமல் வேண்டுகோள்!

Published

on

சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதுவரை 20 சென்டிமீட்டர் மழை சென்னையில் மட்டும் பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதனையடுத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளார். அவருடன் அமைச்சர்களும் களத்தில் இறங்கி சென்னையில் மழை நீர் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு துரிதமான மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெய்து வரும் மழையால் மயிலாப்பூர் மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கட்சியினர் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை விரைவில் செய்யுங்கள். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version