தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்திற்கு சென்று தனது பணிகளைத் தொடங்கினார். முதலில் அவர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளான உதயச்சந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், எம்.எஸ்.சண்முகம் ஆகிய நால்வர் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version