தமிழ்நாடு

வேலூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. மினி டைடல் பூங்கா தொடக்கம்!

Published

on

வேலூரில் டைடல் நியோ என அழைக்கப்படும் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2021-ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலூரில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

அதற்கான அனுமதிகள் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் அதற்கான அடிக்கல்லை நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின்.

Chief Minister M.K.Stalin today laid foundation stone for a Tidel Neo a mini version of Tidel Park

டைடல் நியோ என்பது மினி டைடல் பூங்காவாகும். வேலூரில் ஐடிஐ வளாகத்தில் 4.98 ஏக்கர் நிலப் பரப்பில் இந்த டைடல் நியோ பூங்கா தொடங்கப்பட உள்ளது.

மேலும் ஓலா நிறுவன 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் கிருஷ்ணகிரியில் தொடங்க உள்ள எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இடன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version