தமிழ்நாடு

மக்களின் மளிகை கடனைகூட முதல்வர் ரத்து செய்திருப்பார்: ப.சிதம்பரம் கிண்டல்

Published

on

தேர்தல் இன்னும் தாமதமாக வந்திருந்தால் பொதுமக்களின் மளிகை கடனை கூட முதல்வர் ரத்து செய்திருப்பார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கடந்த சில வாரங்களாக ஆளும் கட்சியிடம் இருந்து பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்தன. விவசாய நகை கடன் ரத்து, விவசாயிகளின் கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, பெண்களின் குழுக்களின் கடன்கள் ரத்து உட்பட பலர் கடன்கள் செய்யப்பட்டன. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் பின்னர் ரத்து செய்யப்பட வேண்டிய கடன்கள் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தேர்தல் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் பொதுமக்களின் மளிகை கடை கடனை கூட முதல்வர் ரத்து செய்திருப்பார் போல என சிதம்பரம் கிண்டலுடன் கூறியுள்ளார். இத்தனை கடன்களை ரத்து செய்ய தமிழகத்தில் எங்கே நிதி இருக்கிறது என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும் என்றும் இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதிமுக தரப்பினர்களோ தமிழகத்தின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வாக்குறுதி கொடுத்தபடி அனைத்து கடன்களையும் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version