இந்தியா

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Published

on

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக முதல்வர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் அதே வேகத்தில் ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மெட்ரோ நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 75% பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தனக்கு லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த படியே தனது முதல்வர் பணியை கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து டெல்லியில் தான் அதிக அளவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version