இந்தியா

ஓமைக்ரான் பாதிப்புக்கு இந்த மருந்தே போதும்!… நிம்மதி கொடுத்த மூத்த மருத்துவர்….

Published

on

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.

omicron

இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் பாரசிட்டமால் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுவதாக டெல்லி லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 60 பேரில் 40 பேர் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி கருத்து அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி கூறிய போது ‘ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கும் 90 சதவீத பேருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. சில பேருக்கு மட்டும் லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி இருந்தது. அவர்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் பாரசிட்டாமல் மருந்துகளைத்தான் கொடுத்து வருகிறோம். வேறு எந்த மருந்துகளுக்கான தேவையும் இப்போதைக்கு எழவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version