வைரல் செய்திகள்

மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது! காரணம் என்ன தெரியுமா?

Published

on

சத்தீஸ்கரில் சிறந்த காவலர் விருதை, காவல்துறை மோப்ப நாய் வென்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அம்மாதத்திற்கான சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் நேர்மையாக, கடுமையாக உழைப்பவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறந்த காவலருக்கான விருதை மோப்ப நாய் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெறும் 4 வயதே ஆன ஜெர்மன் ஜெப்பர்டு இனத்தைச் சேர்ந்த அந்த நாய் செய்த காரியம் அப்படி.

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள உள்ள சாரங்கர் ராஜ் மஹாலில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வெள்ளி தட்டுகள் திருடு போய்விட்டன. இதனை ரூபி மோப்ப நாய் சாமர்த்தியமாக செயல்பட்டு, வெள்ளி தட்டுகளை மீட்க உதவியது.

அத்துடன் பல்வேறு பல்வேறு திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களில் போலீசாருக்கு உதவிகரமாக ரூபி மோப்ப நாய் இருந்துள்ளது. இதன் காரணமாக சிறந்த காவலருக்கான விருதை ரூபி பெற்றுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் விருது போட்டோ, அங்குள்ள மற்ற காவல்நிலையங்களில் வைக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version