சினிமா செய்திகள்

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா: பிரபல இயக்குனர் டுவிட்

Published

on

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என பிரபல இயக்குனர் தனது டுவிட்டரில் நடிகர் வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வடிவேலுக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். இதனால் வடிவேலு பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சேரன் இயக்கிய ’வெற்றி கொடி கட்டு’ என்ற திரைப்படத்தில் துபாய் ரிட்டர்னாக நடித்திருந்த வடிவேலு துபாய் குறித்து அலப்பறைகளை செய்த நிலையில் இந்த காட்சிகளை மனதில் வைத்து இயக்குனர் சேரன் வடிவேலுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’..

seithichurul

Trending

Exit mobile version