சினிமா செய்திகள்

ரீ-ரிலீஸ் செய்யப்படும் சேரனின் திருமணம்!

Published

on

சேரன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான படம் திருமணம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்த போதிலும் அதிக திரை அரங்குகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் படத்தின் ஓட்டத்தைச் சிறிதளவு குறைத்து மீண்டும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது. எனவே மீண்டும் திருமணம் திரைப்படம் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் சரியாகப் போகவில்லை என்று திரை அரங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட அடுத்த சில வாரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது சங்கமம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்கள் வெற்றியைப் பெற்றுள்ளன.

இந்த ரீ-ரிலீஸ் வெற்றிப் பட்டியலில் சேரனின் திருமணம் இடம்பெறுமா என்று இங்குப் பார்ப்போம்.

Trending

Exit mobile version