/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

இந்தியா

ஜனவரி 1இல் இருந்து Cheque இப்படிதான் யூஸ் பண்ணனும்!

Published

on

வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வங்கி காசோலைகளுக்கு (செக்) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கி மோசடி மற்றும் இன்னும் பிற காரணங்களுக்காக இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, செக் வழங்குபவர் யாருக்கு வழங்கினார், எப்போது வழங்கினார், காசோலையின் தேதி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். இதற்கு மொபைல் ஆப், ஆன்லைன் பேங்க், எஸ்எம்ஸ், ஏடிஎம் உள்ளிட்ட மின்னணு முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், காசோலை செலுத்தும் முன்பு மேற்கண்ட விவரங்களை குறுக்கு சோதனை செய்யப்படும். அப்போது ஏதேனும் குறைபாடுகள், தவறான விவரங்கள் கண்டறியப்பட்டால் காசோலை செலுத்த வேண்டிய பேங்கிற்கும், காசோலை வழங்கப்பட்ட பேங்கிற்கும் தகவல் அனுப்பப்படும்.

இது தொடர்பான முழுமையான விவரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி காசோலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த விவரங்களைப் படித்து புரிந்துகொள்ளும்படி வங்கிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version