தமிழ்நாடு

இதை செய்யாவிட்டால் ஏப்ரல் 1 முதல் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது!

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட சிறிய வங்கிகளின் ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலைகள் ஆகியவை ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் மாற்றப்பட வேண்டும் என்றும் இல்லையேல் வங்கியில் பணம் இருந்தாலும் எடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக செலவைக் குறைப்பதற்காக பெரிய வங்கிகளுடன் ஒருசில சிறிய வங்கிகள் இணைக்கப்பட்டன. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி இணைக்கப்பட்டது என்பதும், பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி இணைக்கப்பட்டது என்பதும், அதேபோல் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உடன் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி இணைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த சிறிய வங்கிகளின் டெபிட் கார்டுகள், காசோலைகள், பாஸ்புக் ஆகியவை பெரிய வங்கியுடன் இணைத்தபின், புதியதாக வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் மார்ச் 31-ஆம் தேதி வரை தான் பழைய சிறிய வங்கிகளின் காசோலைகள், பாஸ்புக் மற்றும் ஏடிஎம் கார்டு செல்லும் என்றும் அதன் பின்னர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த காசோலைகள் காலாவதி ஆகிவிடும் என்றும் எனவே அதற்கு முன் சிறிய வங்கிகளின் காசோலைகளை திரும்ப ஒப்படைத்துவிட்டு பெரிய வங்கிகளின் காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version