தமிழ்நாடு

சென்னையில் ரூ.1 கோடி செலவில் ‘செல்லப்பிராணி பூங்கா’!

Published

on

சென்னை: பொது இடங்களில் நாய்கள் சிறுவர்களை கடிப்பது போன்ற செய்திகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சென்னை மாநகர மன்றம் நகரின் முதல் ‘செல்லப்பிராணி பூங்காவை’ அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ரூ.1 கோடி செலவில் செல்லப்பிராணி பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர்களை வெளியிட்டுள்ளது. இந்த செல்லப்பிராணி பூங்காவில் நாய்களுக்காக பிரத்யேக நடைப் பாதை மற்றும் விளையாட்டு பகுதிகள் இருக்கும்.

செல்லப்பிராணி பூங்காவின் நோக்கம்:

நாய்களுக்கான பிரத்யேக இடம் இருப்பதன் மூலம், பொது இடங்களில் நாய்கள் சுற்றித் திரிவது குறைக்கப்படும். இதன் காரணமாக, நாய்கள் மணிதர்களை கடுப்பது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

இந்த செல்லப்பிராணி பூங்கா செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான இடமாகவும் இருக்கும்.

செல்லப்பிராணிகளுடன் விளையாடவும், மற்ற செல்லப்பிராணி வளர்ப்பவர்களுடன் பழகுவதற்குமான பாதுகாப்பான இடமாகவும் இந்த பூங்கா இருக்கும்.

சென்னை மாநகரில் செல்லப்பிராணி வளர்ப்பு அதிகரித்து வருவதால், இந்த செல்லப்பிராணி பூங்கா நிச்சயமாக வரவேற்கத்தக்க (நடவடிக்கை ஆகும். இது நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே சிறந்த உறவை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version