தமிழ்நாடு

சென்னை இளைஞர்களின் தூக்க நேரம் இவ்வளவுதானா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

சென்னையில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த மணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

தூக்கம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. ஒரு மனிதன் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபகாலமாக பலருக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை தூக்கமின்மை தான். குறிப்பாக சென்னை மக்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது

அதாவது 95% மக்கள் 7 மணி நேரத்திற்கு குறைவாகவும் 71% மக்கள் 6 மணி நேரத்திற்கு குறைவாகவும் தூங்குவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உடன் மாநில அரசு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2020 வரை நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை மக்கள் 7 மணி நேரம் படுக்கையில் இருந்தாலும் ஐந்தரை மணி நேரம் மட்டுமே தூங்குவது தெரியவந்துள்ளது. 452 குடியிருப்பாளர்கள் மற்றும் 3833 தனிநபர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலை அற்றவர்கள் மற்றும் குறைவான ஊதியம் பெறுபவர்கள்

தூக்கம் தடைபடுவதற்கு கொசுக்கள், வெப்பம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணங்களும், மன அழுத்தம், போன்ற மன மற்றும் உடல் நலன் சார்ந்த காரணங்களும் கூறப்படுகிறது. இவை தவிர கொரோனாவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நாள் முழுக்க உழைக்கும் மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் மனதையும் உடலையும் தூக்கம் மூலம் உற்சாகம் கொள்கிறான். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வேலைப் பளு அதிகரிப்பு, எதிர்காலத்தை நோக்கிய சிந்தனை, மனிதனின் தூக்க நேரம் குறைந்து விட்டது

இதனால் இளம் வயதினருக்கும் தூக்கமின்மை பிரச்சனை அதிகம் ஏற்பட்டு உடல் நலத்தை பாதிக்கும் என்றும் 45 விழுக்காடு இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சர்க்கரை நோய், உடல் பருமன், உடல் சோர்வு ஏற்படுதல், ஞாபக சக்தி குறைதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் தூக்கமின்மை உடல் அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் தூக்கத்தை சரியான அளவில் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version