இந்தியா

4 கிலோ தங்கம்-வைரம்: திருப்பதி கோவிலுக்கு தானமாக கொடுத்த சென்னை தம்பதி

Published

on

4 கிலோ தங்க வைர நகைகளை சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர் என்பதும் அவர்களில் பலரும் தங்கள் வசதிக்கேற்ப நன்கொடைகளை அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த சரோஜா – சூரியநாராயணன் தம்பதிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற போது தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த நான்கு கிலோ 150 கிராம் தங்க வைர நகைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளித்தனர்.

இந்த நன்கொடையை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகி பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பிரசாதத்தை அளித்தார். மேலும் இந்த நகைகள் விரைவில் மூலவருக்கு சாத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த தம்பதி 4 கிலோ தங்க வைர நகைகளை திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுத்த தகவல் தற்போது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version