தமிழ்நாடு

தமிழகத்தை இரண்டாக பிரித்து சென்னை யூனியன் பிரதேசமாக்கப்படும்: எச்சரிக்கும் சீமான்!

Published

on

மத்தியில் உள்ள பாஜக தங்கள் வசதிக்காக தமிழகத்தை வடதமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு, காஷ்மீரை இரண்டாக பிரித்தது. காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீங்கள் வரும் காலத்தில் காஷ்மீரைப்போல தமிழகத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என அதிரடியாக மாநிலங்களவையில் பேசினார் திமுக எம்பி திருச்சி சிவா.

இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், காஷ்மீரைப் போல தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வாய்ப்புள்ளது. பாஜக, சாதிக் கட்சிகளை அதிகமாக நம்பும். அவர்களுக்காக தமிழகத்தை வடதமிழகம், தென் தமிழகம் என பிரித்து சென்னையைப் புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version