தமிழ்நாடு

சென்னையில் தான் குறைவான வாக்குப்பதிவு சதவீதம்: என்ன காரணம்?

Published

on

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் பகல் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்திலேயே சென்னையில்தான் குறைவான வாக்கு சதவீதம் வாக்குப்பதிவு சதவீதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பகல் ஒரு மணி நிலவரப்படி 23.42 சதவீதமாக மட்டுமே வாக்குப்பதிவாகி உள்ளது. இன்னும் சுமார் 72 சதவீதம் வாக்குப்பதிவு ஒருசில மணி நேரத்தில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பகல் ஒரு மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35. 34 சதவீதம் வாக்குப்பதிவுவாகியுள்ளது. வேலூரில் 36.07%, கரூரில் 50.4%, காஞ்சிபுரத்தில் 41.30%, நெல்லையில் 37.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு தேர்தலிலும் சென்னையில் தான் குறைவான சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதை போல் இந்த தேர்தலிலும் சென்னையில் குறைந்தளவே வாக்குப்பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version