தமிழ்நாடு

அமித்ஷா-வின் சென்னை வருகை திடீர் ரத்து..!- காரணம் என்ன?

Published

on

துக்ளக் விழாவில் பங்கேற்க சென்னை வருவதாக இருந்த அமித் ஷா-வின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

துக்ளக் விழாவில் பங்கேற்க ஜனவரி 14-ம் தேதி தமிழக தலைநகர் சென்னை வருவதாக இருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டு விழா வருகிற ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு தலைமை தாங்க அமித்ஷா வருவதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டு உறுதி செய்திருந்தது.

அமித்ஷா-வின் தமிழக வருகை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் பல அரசியல் பேச்சுவார்த்தைகள் யுத்திகள் செயல்படுத்தப்படும் என்றும் பலவாறு செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன. கூடுதலாக, நடிகர் ரஜினி உடனான பேச்சுவார்த்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனான கூட்டணி ஒப்பந்தம் எனப் பல வேலைகள் அமித்ஷாவுக்கு சென்னையில் இருந்தன. ஆனால், திடீரென அமித்ஷா தனது சென்னை வருகையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தகவலை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

Trending

Exit mobile version