தமிழ்நாடு

15 ஆண்டுகளுக்கு பின் வடபழனி முருகன் கோவிலுக்கு குடமுழுக்கு: அமைச்சர் அறிவிப்பு

Published

on

15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் அறிவித்துள்ளார்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலை துறை அமைச்சரும் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று வடபழனி முருகன் கோயிலை அவர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது குடமுழுக்கு விழா தேதியை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வடபழனி முருகன் கோவிலுக்கு 15 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு நடைபெற உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முருக பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version