தமிழ்நாடு

ஊட்டியாக மாறும் சென்னை.. இரவு நேரங்களில் 18 டிகிரியாக குளிர் அதிகரிப்பு!

Published

on

பொங்கல் கொண்டாட்டங்களின் போது சென்னையில் ஊட்டி போலக் குளிர் எடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வரும் நாட்களில் சென்னையில் நள்ளிரவு நேரங்களில் 18 டிகிரிக்கும் செல்சியஸ்க்கும் குறைவாக வெப்ப நிலை குறையும்.

அடுத்த 48 மணி நேரங்களுக்கு அதிகாலை நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மூடுபனி காணப்படும்.

அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 20-21 டிகிரி செல்சியசாக இருக்கும்.

வானம் மேகமூட்டத்துடனே காணப்படும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

போகியன்று மக்கள் காலையிலேயே பல இடங்களில் பழைய ஆடைகள் போன்றவற்றை எரித்தால், சென்னை நகரம் முழுவதும் காற்று மாசு அடைந்து காணப்பட்டது.

போகி பண்டிகையின் போது எரிக்க உள்ள பழைய பொருட்களைச் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் வாங்கி முறையாக அப்புறப்படுத உத்தரவிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version