தமிழ்நாடு

சென்னையில் இன்று காலை திடீரென நிறுத்தப்பட்ட பேருந்துகள்: பயணிகள் அதிர்ச்சி

Published

on

சென்னையில் திடீரென இன்று காலை பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அதிகாலையிலேயே பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் நடத்தியதால் சிறிது நேரம் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டு பேருந்துகளை இயக்கினார்கள்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சில நிமிடங்கள் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தும் குத்தகைக்கு விட்டும் 6 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்திருக்கும் முடிவை தண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த சில மணி நேர அடையாள போராட்டத்தை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை காண்பிக்கும் வகையில் சில மணி நேர போராட்டத்தை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version