தமிழ்நாடு

சென்னை கனமழை எதிரொலி: 3 சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்தில் மாற்றம்!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து பெரும்பாலான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஒரு சில சுரங்க பாதைகளில் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1. பெரம்பூர் பேரக்ஸ் ரோடு X ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் (ஆர்த்தி அப்பார்ட்மெண்ட்ஸ்) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஸ்டரகான்ஸ் ரோடு மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன.

2. நசரத்பேட்டை நீதிமன்றம் அருகில் நீர் தேங்கி உள்ளது. இருப்பினும் போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை.

3. K-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிமலஸ் சாலை – புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் நீர் உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.

திருமுலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணி மஹால் – பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளூவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமுலைப்பிள்ளை ரோட்டில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை போக்குவரத்து மாற்றம் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version