தமிழ்நாடு
தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கம்! ரயிலுக்கு தமிழ்ச்சங்கம் என பெயர்?
சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவை இயக்கம் மீண்டும் தொடங்கிய நிலையில், முதல் வருகையில் சு. வெங்கடேசன் எம்பி இனிப்பு கொடுத்து வரவேற்றார்.
தென்மாவட்ட மக்களுக்கு சிறந்ததொரு வசதியாக சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இருந்து வந்தது. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி இந்த ரயில் சேவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் ரயில்வே அமைச்சரிடம் தேஜஸ் இயக்கத்தை தொடரும்படி வலியுறுத்தினார்.
இந்த நிலையில், தேஜஸ் ரயில் இயக்கம் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே கோட்டம் அறிவித்தது. முதல்நாளான நேற்று சென்னையிலிருந்து பயணிகளுடன் கிளம்பிய தேஜஸ் ரயில் மதுரை வந்தடைந்தது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் பயணிகளுக்கும், ரயில் ஓட்டுநருக்கும் இனிப்புகளைக் கொடுத்து வரவேற்றார். மேலும், தேஜஸ் ரயிலுக்கு தமிழ்ச்சங்கம் என்று பெயர் சூட்டும்படி கோரிக்க விடுத்துள்ளார்.
விரைவில் இது தொடர்பாக ரயில்வே தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.