தமிழ்நாடு

சென்னையில் ரோப்கார் மூலம் பறக்கலாம்.. எங்கு இருந்து எது வரையில் தெரியுமா?

Published

on

சென்னையில் விரைவில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறன.

இந்த ரோப்கார் திட்டம் ஆய்வுப் பணிகள் சென்னை மெரினா கடற்கரை முதல் பெசண்ட் நகர் வரை நடைபெற்று வருகிறது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இந்த 4.60 கிலோ மீட்டர் தொலைவுக்கான ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் இந்த ரோப்கார் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் டிராபிக் பிரச்சனை ஏதுமில்லாமல் எளிதாக மெரினாவிலிருந்து பெசன்ட் நகருக்குப் பறந்து செல்ல முடியும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொடைக்கானல் – பழனிக்கு ரோப்கார் சேவை உள்ளது.

தொடர்ந்து சென்னை நேப்பியர் பாளம் முதல் லைட் ஹவுஸ் வரையிலும் ரோப்கார் அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version