தமிழ்நாடு

சென்னையில் லண்டன் போல போக்குவரத்து.. மாஸ் கூட்டணி!

Published

on

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லண்டன் போல ஒருங்கிணைந்த போக்குவரத்து மாடலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காகச் சென்னை யுனிஃபைட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனுடன் (TFL) கூட்டு சேர்ந்து , சென்னை மாநகரத்துக்கான புதிய விரிவான மொபிலிட்டி திட்டத்திற்கான தொழில்நுட்பங்கள் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்.

லண்டனில் மெட்ரோ, டிராம், பேருந்து மற்றும் ரயில்கள் என அனைத்து வகையான போக்குவரத்துகளையும் டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் நிர்வகித்து வருகிறது.

மேலும் சென்னையில் விரைவில் எல்லா போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்த பொதுவான டிக்கெட் சேவை அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் சேவை, மாநகர போக்குவரத்து சேவை என அனைத்துக்கும் சேர்த்து ஒரே வகையான கார்டு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி எல்லா போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும். தனித்தனியாக கார்டு அல்லது பாஸ் அல்லது டிக்கெட் தேவையில்லை என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version