இந்தியா
கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து கிளம்பும் 5 முக்கிய ரயில்கள் ரத்து!
கனமழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் உள்பட 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா உள்பட ஒரு சில மாநிலங்களிலும் மழை பெய்துள்ளதால் சென்னையிலிருந்து டெல்லி வரை செல்லும் 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு:
1. வண்டி எண் (12616): டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்
2. வண்டி எண் (12626); டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில்
3. வண்டி எண் (12270): டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல்
4. வண்டி எண் (12622): டெல்லி – சென்னை சென்ட்ரல்விரைவு ரயில்
5. வண்டி எண் (12655): அகமதாபாத் – சென்ட்ரல் விரைவு ரயில்