இந்தியா

இன்று உருவாகிறது அசானி புயல்: சென்னை-அந்தமான் விமானங்கள் ரத்து!

Published

on

அந்தமான் கடல் பகுதியில் இன்று இரவு அசானி புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்றும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் இன்று இரவு அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாக இருப்பதாகவும் இந்த புயலுக்கு அசானி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் அந்தமான் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் அந்தமானில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அந்தமான் பகுதியில் இன்று சூரைக்காற்று மற்றும் கனமழை பெய்யும் காரணத்தினால் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தமானில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version