தமிழ்நாடு

சென்னை அனல் மின் நிலையத்தில் 3-ம் நிலை விரைவில் தொடக்கம்.. கோடையில் மின்சார பிரச்சனை தீருமா?

Published

on

சென்னை அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8,722 கோடி ரூபாய் செலவில் சென்னை அனல் மின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 3-ம் நிலையின் பணிகள் 95 சதவிகிதம் முறை முடிந்துள்ளது எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியில் 800 மெகா வாட்ஸ் அதிகரித்து 4,320 மெகா வாட்ஸ் ஆக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 மே மாதம் முதல் சோதனை ஓட்டமாக மின்சாரம் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தின் பணிகள் 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் சென்னையில் கார்பன் படிமத்தைக் குறைக்கும் நோக்கமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை ஆமைக்கு முடிவு செய்துள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் எரிவாயு விசையாழி நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்யும் பணிகளைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடங்கியுள்ளது.

Chennai Gas Turbine

சென்னை பேசின் பிரிட்ஜில் உள்ள மூடப்பட்ட எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையமாக மாற்றவும் முடிவு செய்துள்ளது.

மேலும் புதிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலமாக மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை எண்ணூரில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயைப் பயன்படுத்தவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version