தமிழ்நாடு

சென்னைவாசிகளுக்கு ஓர் நற்செய்தி!

Published

on

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னையில் திங்கள் முதல் சனி வரையில் 600 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோர் மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் அனைவரும் செல்லாம் என கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதாக சென்னை கோட்டம் தெரிவித்தள்ளது. அதன்படி, இனி 401 ரயில்சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து  வேளச்சேரிக்கு 52 சேவைகளும், செங்கல்பட்டுக்கு 136 ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.

இதே போல் சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 66 ரயில்களும்,  சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் 147 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Trending

Exit mobile version