தமிழ்நாடு

சென்னை மாணவிகள் புத்திசாலிகள்: சிலாகித்துக் கொண்ட ராகுல்காந்தி!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ராகுல் காந்தி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் 3000 மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் மிகவும் ஓப்பனாக சகஜமாக அமைந்தது. இதில் மாணவிகளை ராகுல் காந்தி எதிர்கொண்ட விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன்னை சார் என அழைத்த மாணவியிடம் சார் என கூற வேண்டாம், ராகுல் என்றே அழையுங்கள் என ராகுல் கூறியது வைரலாக பரவி வருகிறது.

மாணவிகளின் கேள்விக்கு ராகுல் காந்தி கொஞ்சம் கூட தடுமாறாமல் நேர்த்தியாக பதில் அளித்த விதம் அவரது செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி ராகுல் காந்திக்கு கூட தனிப்பட்ட ரீதியில் திருப்தியை கொடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ராகுல்காந்தி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் போது மாணவிகளுடனான சந்திப்பு குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டே சென்றிருக்கிறார். அப்போது சென்னை மாணவிகள் புத்திசாலிகள் என பாராட்டியுள்ளார். ராகுலின் இந்த நிகழ்ச்சி குறித்தான வீடியோ அவரது இமேஜை உயர்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version