தமிழ்நாடு
பட்டனை தட்டினால் பிரியாணி.. இந்தியாவின் முதல் பிரியாணி ஏடிஎம் மிஷின் சென்னையில்..!
பட்டனை தட்டினால் உடனே உணவுப் பொருள்கள் வரும் என்பதை ஹாலிவுட் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே மிகவும் பிடித்த உணவான பிரியாணி, பட்டனை தட்டினால் வரும் என்ற வசதி சென்னையில் வந்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மெஷின் மூலம் பிரியாணி சப்ளை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிக எளிதாக பிரியாணியை வாங்க முடிவதாக இதனை பயன்படுத்திய மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முதல் பிரியாணி விற்பனை இயந்திரம் சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த பிரியாணி மிஷினை நிறுவி உள்ளது என்பதும் மிஷின் மூலம் பிரியாணி சப்ளை செய்யும் இந்தியாவின் முதல் முயற்சி இதுதான் என்ற பெருமை இதற்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக 12 இடங்களில் இருந்து மிஷினை வைத்துள்ளதாகவும் போக போக சென்னை முழுவதும் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வருங்காலத்தில் இந்தியா முழுவதும் ஏராளமான மெஷின்களை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பிரியாணி வாங்கும் முறை மிகவும் எளிதாக இருப்பதாக இதை பயன்படுத்திய பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த மிஷின் அருகே சென்று தொடுதிரையில் உள்ள பிரியாணி மெனுவை பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வகை பிரியாணி வேண்டும் என்பதை தேர்வு செய்து அதன் பின்னர் க்யூஆர் கோடு அல்லது கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் அட்டை மூலம் பணத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகு அடுத்த நிமிடம் உங்களுக்கு பிரியாணி வெளியே வரும்.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிய போது சென்னையில் தற்போது 12 மிஷின்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் வருங்காலத்தில் இந்தியா முழுவதும் இயந்திரங்கள் மூலம் பிரியாணி கொடுக்க வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மெஷினில் பிரியாணி வாங்கியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இனிமேல் பிரியாணி வேண்டும் என்பதற்காக கடைக்கு சென்று மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த மிஷின் அருகே சென்று பட்டனை தட்டினால் போதும் உடனே சுடச்சுட பிரியாணி உங்கள் முன் வரும்.
https://www.instagram.com/p/CphMVJKohoX/