தமிழ்நாடு

ரஷ்யாவில் நடைபெறவிருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றம்: முதல்வர் பெருமிதம்

Published

on

ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதில் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்கள் .

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் போர் காரணமாக ரஷ்யாவுக்கு செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெறவிருந்த உலக செஸ் போட்டியை சென்னைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து செஸ் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டிகளில் பங்கேற்க வரும் உலக செஸ் வீரர்கள் வரவேற்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டியில் 52 நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் செஸ் வீரர்கள் வீராங்கனைகள் சென்னைக்கு வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version